Connect with us

தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்திய Biggboss 7 பிரதீப்..வைரலாகும் புகைப்படம்!

Bigg Boss Tamil Season 7

தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்திய Biggboss 7 பிரதீப்..வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் அருவி,யாழ்,டாடா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி…அதை தாண்டி Biggboss மூலம் டாப்பில் இப்போது இருக்கின்றார்…சினிமாவில் இவருக்கு கிடைக்காத பெயரையும், புகழையும் ஒரே மாதத்தில் சம்பாதித்து கொடுத்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி…பல விமர்சனங்கள் இருந்தாலும் இவருக்கு வரவேற்பு இருக்கின்றது…

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் பிரதீப்…இந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி டைட்டில் ஜெயிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப், ரெட் கார்டு கொடுத்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்…அப்படி ஒரு சூழல் இருந்தது…

பிரதீப்பால் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி மாயா,பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன், சரவண விக்ரம், ரவீனா, மணி ஆகியோர் குற்றச்சாட்டு முன்வைத்ததை அடுத்து அவர்மீது அதிரடி ஆக்‌ஷன் எடுக்க முடிவெடுத்த கமல் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றினார்…அவர் வெளியே அனுப்ப பட்டிருந்தாலும் அவருக்கு மாஸ் குறையவில்லை…

பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது நியாயமற்றது என கூறி பல்வேறு பிரபலங்களும் குரல் கொடுத்தனர்…கமல் தன்னுடைய முடிவில் மாற்றமில்லை எனக்கூறி கடந்த வாரம் திட்டவட்டமாக கூறினார்.

இதனால் பிரதீப் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கம்பேக் கொடுக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதியானது.,இருந்தாலும் அடுத்த இன்னிங்கிஸ் இப்போது அவர் துவங்கி இருக்கின்றார்…

இந்த நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி தன்னுடைய யூடியூப் சேனலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து தினசரி வீடியோ போட்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று அவர் ரிவ்யூ செய்தபோது பிரதீப் ஆண்டனி தன்னுடைய கேர்ள் பிரெண்ட் உடன் வந்து கலந்துகொண்டுள்ளார்… அவரின் முகத்தை முதல் முறை காண்பித்து உள்ளார் பிரதீப்…இப்போது இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top