Connect with us

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை..திமுக செய்யும் சூழ்ச்சி..!அண்ணாமலை ட்வீட்..

Politics

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை..திமுக செய்யும் சூழ்ச்சி..!அண்ணாமலை ட்வீட்..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல விஷயங்களை செய்து வருகின்றார் அவை அனைத்தும் அதிகமாக பேசப்பட்டு வருவது வழக்கமாகும்…இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் கூட்டுறவு சங்கங்களில் 2257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது…இது பலருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கலாம்…

இன்றைய நாளிதழில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுமார் 64 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது….அவர்களிலிருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்காமல் எதற்காக கூட்டுறவுத் துறை பணியிடங்களுக்கு நேரடி விண்ணப்பம் கோரப்படுகிறது இது எந்த விதத்தில் நியாயமாகும் என்ற கேள்வி எழுந்து இருக்கின்றது,கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேர்தல் நடந்து அவர்களின் கண்காணிப்பில் தான் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும்…

அது தான் சரியானதாகும்..அப்படி இருக்கும் நேரத்திலும்,கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேர்தல் நடத்தாமல் அவசர அவசரமாக பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோருகின்றனர்…இதில் சரியான காரணம் இல்லை என தெரிகிறது,…

லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும்போது அவர்களைப் மதிக்காமல்,கண்டுக்கொள்ளாமல் – அரசுப் பணிகளை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்க முயற்சிப்பதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும்…இது அவர்களின் பதிவையை காண்பிப்பது போல தான் தெரிகின்றது,…

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள தகுதியான இளைஞர்களுக்கு பணிகள் கொடுக்க வேண்டும் என்றும் முன்னுரிமை முக்கியம் என்றும் சொல்லப்படுகிறது..இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வொன்றும் ஒவ்வரு ரகம் : பந்துவீச்சில் கலக்கிய SRH - LSG அணி 165 ரன்கள் குவிப்பு..!!

More in Politics

To Top