Connect with us

“விசித்ரா மீது வழக்கு தொடுத்த பூர்ணிமா..! வெடிக்கும் விவாதங்கள்! Promo Video!”

Bigg Boss Tamil Season 7

“விசித்ரா மீது வழக்கு தொடுத்த பூர்ணிமா..! வெடிக்கும் விவாதங்கள்! Promo Video!”

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிக் பாஸ் கோர்ட் காட்சிகள் நடைபெற இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் யார் மீது வேண்டுமானாலும் வழக்கு தொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முதல் கட்டமாக விசித்ரா மீது பூர்ணிமா வழக்கு தொடுத்தார். சமையலில் ஏபிசிடி கூட தெரியாத அர்ச்சனாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக விசித்ரா கேம் விளையாடினார் என்றும், அர்ச்சனாவுக்காக அவர் எங்களை பழிவாங்கினார் என்றும் குற்றம் சாட்டினார்.

அப்போது விசித்ரா, ‘இப்ப அர்ச்சனா கிட்ட பிரச்சனையா? அல்லது அவர்களுக்கு சமையல் தெரியாது என்ற பிரச்சனையா? என்ற கேள்வி கேட்ட விசித்ரா சமையல் தெரியாது என்பதே இங்கு பிரச்சனை கிடையாது என்று கூறிய அவர் நான் எதற்காக உங்களை பழி வாங்க வேண்டும் என்று கூறினார்.

ஸ்மால் பாக்ஸ் ஹவுஸ் மேட்டுகளை அவர்கள் தான் பழி வாங்கினார்கள் என்று விசித்ரா கூறியதோடு, இவங்க பண்றது அர்ச்சனாவை தனிப்பட்ட முறையில் பழிவாங்குகிறார்கள், எனது ஹவுஸ் மேட் மீது வீண் பழி போடுகிறார்கள்’ என்று ஆணித்தரமாக வாதாடினார். இந்த வழக்கின் ஜட்ஜ்மெண்ட் என்ன ஆகும்? இனி அடுத்தடுத்து வரும் வழக்குகள் என்னென்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top