Connect with us

டாஸ் ஜெயிச்சாச்சு மேட்ச் ஜெயிப்பாங்களா – ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு..!!!

Featured

டாஸ் ஜெயிச்சாச்சு மேட்ச் ஜெயிப்பாங்களா – ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக பந்துவீச முடிவு செய்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பெங்களூரில் உள்ள உலக புகழ் பெற்ற சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் RCB – SRH அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

நடப்பு தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ள ஹைதராபாத் அணி 3 போட்டியில் வெற்றி பெற்று 2 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 4 ஆவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள பெங்களூரு அணி 1 போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் கோப்பை: 2018 ஐபிஎல் இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிகழ்த்திய மறக்க முடியாத வெற்றி

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top