Connect with us

‘அயலான்’ திரைப்படத்தின் ‘Maanja Nee’ ப்ரோமோ பாடல்வெளியானது..!!

Cinema News

‘அயலான்’ திரைப்படத்தின் ‘Maanja Nee’ ப்ரோமோ பாடல்வெளியானது..!!

சிவகார்த்திகேயனின் ஜாலியான நடிப்பில் உருவாகி உள்ள அயலான் படத்தின் ‘Maanja Nee’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

தமிழ் சினிமாவின் குடும்ப நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன் . புத்தம் புது வித்தியாச படங்களுக்கு பெயர் போன நடிகராக விளங்கும் இவரது நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் படு பிரம்மாண்டமாக தயாராகி உள்ள திரைப்படம் தான் ‘அயலான்’ .

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்த பாடலான ‘Maanja Nee’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

மாபெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் பல தடைகளை தாண்டி நெடு நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது திரைக்கு வர உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் உள்நாடு வெளிநாடு என அணைத்து இடங்களிலும் மாறி மாறி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பட தடைகளை தாண்டி சாதனை படைக்க திரைக்கு வர இருக்கும் அயலான் மக்களின் மனதை கவர்ந்து சாதனை படைக்குமா காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இதுவரை யாரும் செய்யாத உலகசாதனை - கொல்கத்தா கொடுத்த இமாலய இலக்கை கடந்து வரலாறு படைத்தது பஞ்சாப் அணி..!!

More in Cinema News

To Top