Connect with us

ஆல் ரவுண்டர் தாபா எனக்கு பிடிக்கும் – மிரட்டலான காட்சிகளுடன் வெளியானது அசோக் செல்வனின் ‘ப்ளூ ஸ்டார்’ ட்ரெய்லர்..!!

Cinema News

ஆல் ரவுண்டர் தாபா எனக்கு பிடிக்கும் – மிரட்டலான காட்சிகளுடன் வெளியானது அசோக் செல்வனின் ‘ப்ளூ ஸ்டார்’ ட்ரெய்லர்..!!

அசோக் செல்வன், சாந்தனுவின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் தாறுமாறான ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயக்குமார் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அவரது காதல் மனைவி கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார் .

மீடியம் படிஜட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் அசோக் மற்றும் கீர்த்தியுடன் சேர்ந்து சாந்தனு பாக்யராஜ் பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில் இப்படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலரில் ஆரம்பமே காரசாரமான என்ட்ரியுடன் அசோக் மற்றும் சாந்தனு எதிர் எதிர் கிரிக்கெட் வீரர்களாக வருகின்றனர்.

கிரிக்கெட் விளையாட்டின் மூலம் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வருவதுபோல் தெரிகிறது இதற்கிடையில் நம்ப அசோக் மற்றும் கீர்த்தி பாண்டியனின் காதல் காட்சிகளும் வருகிறது .

அதிலும் குறிப்பாக கிரிக்கெட்லயே எனக்கு ரொம்ப பிடிச்சது ஆல் ரவுண்டர் தான் என கீர்த்தி கூற நானும் ஆல் ரவுண்டர் தாண்டி என அசோக் கூற அதற்கு தெரியும்டா என நச்சென்று ஒரு இச்சு கொடுக்கிறார்.

இறுதியில் எல்லா படங்களிலும் வருவது போல் பரபரப்பான காட்சிகளுடன் ட்ரைலர் முடிகிறது அதுமட்டுமின்றி இப்படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்த்து வரும் நடிகர்கள் பட்டியலில் சரசரவென முன்னேறி வரும் அசோக் செல்வனின் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படமும் அசோக் செல்வனுக்கு வெற்றிப்படமாக அமையுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

More in Cinema News

To Top