Connect with us

லேபிள் வெப் சீரிஸுக்கு பிறகு விஷ்ணு விஷாலை வைத்து படம் இயக்கும் அருண் காமராஜ்

Cinema News

லேபிள் வெப் சீரிஸுக்கு பிறகு விஷ்ணு விஷாலை வைத்து படம் இயக்கும் அருண் காமராஜ்

லேபிள் என்ற வெப் சீரிஸை இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்ற இயக்குனர் அருண் காமராஜ் அடுத்து நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் கல்லூரி கால நண்பரான அருண் காமராஜ், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிவகார்த்திகேயனும் அந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

இந்த படம் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை இயக்கிய அருண் காமராஜ், அதன் பின்னர் ரஜினிகாந்திடம் கதை சொல்லியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அது அடுத்த கட்டத்திற்கு முன்னேறவில்லை.

மேலும், நயன்தாராவிடம் ஒரு கதை சொன்னதாக கூறப்பட்டாலும், அதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், நடிகர் ஜெய்யை வைத்து லேபிள் என்ற வெப் சீரிஸை இயக்கி இருந்தார். இந்த சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விஷ்ணு விஷாலிடம் ஒரு படத்திற்கான கதையை கூறி சம்மதம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அருண் காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பது உறுதியாகி விட்டதாகவும், இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார் ரேஸில் முழு கவனம் செலுத்தும் அஜித் – 2027 வரை அட்டவணை வெளியீடு!

More in Cinema News

To Top