Connect with us

லால் சலாம் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா? சமூக வலைதளத்தில் ரசிகர்களின் விமர்சனம் இதோ

Lal_Salaam_Review

Cinema News

லால் சலாம் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா? சமூக வலைதளத்தில் ரசிகர்களின் விமர்சனம் இதோ

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 மற்றும் வை ராஜா வை படங்களுக்கு பிறகு இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படமான லால் சலாம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. படம் 1990களில் நடப்பது போலவும், கிரிக்கெட்டை மையமாக வைத்தும் எடுக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் மத மோதல் குறித்தும் பேசப்பட்டுள்ளதால் படம் வெளியாகும் முன்பே அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் படம் வெளியான பிறகு ரசிகர்கள் படத்திற்கு கலவையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தோல்விக்கு கிடைத்த பரிசு : மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ₹24 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ..!!!

More in Cinema News

To Top