Connect with us

முழுக்க முழுக்க பிளாக் அண்ட் ஒயிட்டில் வெளியாக உள்ள மம்முட்டியின் புதிய படம்

Bramayugam_Mammootty

Cinema News

முழுக்க முழுக்க பிளாக் அண்ட் ஒயிட்டில் வெளியாக உள்ள மம்முட்டியின் புதிய படம்

நடிகர் மம்முட்டி நடிப்பில் பிப்ரவரி 15 அன்று வெளியாக உள்ள பிரம்மயுகம் படம் முழுக்க முழுக்க பிளாக் அண்ட் ஒயிட்டில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக தொடர்ந்து வித்தியாசமான கதையம்சங்களை கொண்ட படங்களை தேர்வு செய்து மம்முட்டி நடித்து வருகிறார். புழு, கண்ணூர் ஸ்குவாட் மற்றும் காதல் தி கோர் படங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை ஆகும். குறிப்பாக காதல் தி கோர் படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடிக்க அவர் ஒப்புக்கொண்டதே ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது என்று கூறலாம்.

இந்நிலையில், 2022இல் பூதாகாலம் என்ற படத்தை இயக்கி வரவேற்பை பெற்ற இயக்குனர் ராகுல் சதாசிவம் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள பிரம்மயுகம் திரைப்படம் பிப்ரவரி 15 அன்று திரைக்கு வர உள்ளது. நைட்ஷிப்ட் ஸ்டூடியோஸ் மற்றும் ஒய்நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். மேலும், நடிகர் அர்ஜுன் அசோகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பேய் திரில்லர் படமாக தயாராகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்த நிலையில், தற்போது மேலும் ஒரு சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படம் முழுக்க பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top