Connect with us

எப்படி கடந்து செல்வது – என் மகன்களையும் சேர்த்து.. தந்தையர் தினத்தன்று ஆர்த்தியின் உருக்கமான பதிவு வைரல்..

Featured

எப்படி கடந்து செல்வது – என் மகன்களையும் சேர்த்து.. தந்தையர் தினத்தன்று ஆர்த்தியின் உருக்கமான பதிவு வைரல்..

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். கடந்த வருடம், அவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழப் போவதாக அறிவித்திருந்தார். அதன் பின்னர், இருவருக்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவியது.

சமீபத்தில், ஒரு திரைப்பட தயாரிப்பாளரின் மகள் திருமண விழாவில் நடிகர் ரவி மோகன், கெனிஷா என்ற இளம்பெண்ணுடன் மேட்சிங் உடையில் தோன்றி, சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படத் தொடங்கினார். இதனால் கோபமடைந்த ஆர்த்தி, ரவிக்கு எதிராக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் பின்னர், இருவரும் அறிக்கைகள் மூலமாக ஒருவரை ஒருவர் குறை கூறும் நிலை தொடர்ந்தது. இந்த நிலையில், தந்தையர் தினத்தை முன்னிட்டு ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் உணர்ச்சிமிகுந்த ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் ஆர்த்தி கூறியுள்ளதாவது: “என்னை முதலில் நேசித்த, நேசித்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதர். என்னை சுற்றி பல விஷயங்கள் நிச்சயமற்றது என்பதை நான் உணர்ந்தபோது, நீங்கள் மட்டும் என்னுடன் உறுதுணையாக இருந்தீர்கள். நான் எப்படி கடந்து செல்வது என்று எனக்கு தெரியாத நாட்கள் இருந்தன. அப்போது என் பக்கத்தில் அமைதியாகவும், உறுதியாகவும், பலமாகவும் நின்றீர்கள்.
நீங்கள் என்னை மட்டும் வளர்க்கவில்லை, எல்லா வழிகளிலும் என் மகன்களையும் சேர்த்து வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.”

இந்த பதிவு, நெட்டிசன்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளது. பலரும், இவரது உருக்கமான வார்த்தைகள் அவரது தந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்துவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சுற்றி வளைத்த போலீஸ்… ஜோவிகா எடுத்த அதிர்ச்சி முடிவு – வனிதா உடைத்த ரகசியம்..

More in Featured

To Top