Connect with us

நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் IT ரெய்டு? – உண்மையில் என்ன நடந்தது?

Featured

நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் IT ரெய்டு? – உண்மையில் என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பரவலாக கொண்டாடப்படும் பிரபல நடிகர்களில் ஒருவர் ஆர்யா. அறிந்தும், அறியாமலும், வட்டாரம், நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், மதராசப்பட்டினம், ஆரம்பம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல சிறந்த திரைப்படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் நடிப்பில் “வேட்டுவம்”, “Mr. X”, “சார்பட்டா பரம்பரை 2” ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிப்புடன் மட்டுமல்லாது, தொழில்துறையிலும் ஆர்யா கடந்த சில ஆண்டுகளாக அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, சென்னையில் மட்டும் ஐந்து இடங்களில் அவருக்கு சொந்தமான ஹோட்டல்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் உள்ள நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை தொடங்கி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி மேலும் விரிவான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித்தின் 65வது படத்தை இந்த இயக்குனர் இயக்க வாய்ப்பு உள்ளது? புதிய கூட்டணி உருவாகுமா?

More in Featured

To Top