Connect with us

மத்திய பாதுகாப்புதுறை அமைச்சரை சந்தித்த அமரன் படக்குழு – காரணம் என்ன தெரியுமா..?

Cinema News

மத்திய பாதுகாப்புதுறை அமைச்சரை சந்தித்த அமரன் படக்குழு – காரணம் என்ன தெரியுமா..?

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்,கே உள்பட மாபெரும் நட்சத்திர பட்டாளமே ஒன்று கூடி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமே அமரன் .

கடந்த தீபாவளியன்று வெளியான படம் நாட்டுக்காக வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது . இப்படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும் அவரது மனைவியாக சாய் பல்லவியும் நடித்து அசத்தி இருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

இப்படத்தை பாராட்டி இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் அவரை நேரில் அழைத்து கௌரவித்த நிலையில் சிவகார்த்தியேன், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் படக்குழுவினர் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது அமைச்சர் ராஜ்நாத் சிங் அமரன் படம் வெற்றி பெற்றது தொடர்பாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாரா - தனுஷ் இடையே சட்டப்போர்: ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம்!

More in Cinema News

To Top