Connect with us

கார் ரேஸில் கலக்கப்போகும் அஜித் – நடிகர் மாதவன் புகழாரம்..!!

Cinema News

கார் ரேஸில் கலக்கப்போகும் அஜித் – நடிகர் மாதவன் புகழாரம்..!!

நடிகர் அஜித் தனது சொந்த கார் ரேஸிங் கிளப் மூலம் கார் ரேஸில் கலந்துகொள்ள உள்ள நிலையில் அவருக்கு நடிகர் மாதவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் உருவாக வலம் வரும் நடிகர் அஜித் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி , குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

சினிமாவில் நடிப்பதை தாண்டி கார் மற்றும் பைக் ரேஸிங் மீது அதீத ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் சமீப காலமாக கார் ரேஸிங் பயிற்சி எடுத்து வருகிறார் . இதனால் அவர் மீண்டும் கார் ரேஸில் ஈடுபட உள்ளது உறுதியாகி உள்ளது .

‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற புதிய கார் பந்தய அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ள நிலையில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு துறையும் உறுதுணையாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் தனது சொந்த கார் ரேஸிங் கிளப் மூலம் கார் ரேஸில் கலந்துகொள்ள உள்ள நிலையில் அவருக்கு நடிகர் மாதவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஜித்குமார் ரேசிங் அணி ட்ராக்கில் சீறிப்பாய்வதை காண ஆவலாக உள்ளேன். என்ன ஒரு அற்புதமான மனிதர். என்ன நடந்தாலும் அவரின் கனவுகளை நோக்கி சென்றுக் கொண்டே இருக்கிறார்


ரேஸிங்கிற்கு தயாராகி வரும் நடிகர் அஜித்திற்கு அதில் வெற்றி காண வாழ்த்துகிறேன் என நடிகர் மாதவன் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனது மகன் நாக சைத்தன்யா திருமணத்திற்கு விலையுயர்ந்த பரிசு வாங்கிய நாகர்ஜுனா!

More in Cinema News

To Top