Connect with us

கேரவனில் தனுஷ் நடந்துகொள்ளும் விதத்தை பற்றி அமலா பால் என்ன சொன்னார் தெரியுமா?

Featured

கேரவனில் தனுஷ் நடந்துகொள்ளும் விதத்தை பற்றி அமலா பால் என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் தனுஷ் இன்று தமிழ் சினிமாவை தாண்டி, உலகளாவிய அளவில் புகழ் பெற்ற நடிகராக உயர்ந்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் ‘குபேரா’. இந்த படத்தை இயக்கியுள்ளார் சேகர் கம்முலா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘குபேரா’ திரைப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் தற்போது ‘இட்லி கடை’ மற்றும் ‘Tere Ishq Mein’ எனும் படங்களில் நடிக்க உள்ளார்.

தனுஷின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்று ‘வேலையில்லா பட்டதாரி’. இது அவரது 25வது திரைப்படமாகும். படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடித்திருந்தார்.

சமீபத்தில், ‘வேலையில்லா பட்டதாரி’ படப்பிடிப்பு நேரத்தில் நடந்த ஒரு அனுபவத்தை அமலா பால் பகிர்ந்துள்ளார். அதில், “வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தேன். அப்போது நாம் அனைவரும் கேரவனில் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவோம். தனுஷ் உடலில் ஒல்லியாக இருந்தாலும், உணவை நிறைய சாப்பிடுவார். அவர் முழுமையாக சைவ உணவையே விரும்பி சாப்பிடுவார். ஆனால் முட்டையை மட்டும் அசைவமாகச் சேர்த்து சாப்பிடுவார்.

மேலும், சாப்பிடும் நேரத்தில் அவருக்கு ஒரு தனித்துவமான பழக்கம் உள்ளது. அவர் கவுண்டமணி அவர்களின் மிகப்பெரிய ரசிகர். எனவே, சாப்பிடும்போது கேரவனில் இருக்கும் டிவியில் கவுண்டமணி அவர்களின் நகைச்சுவை காட்சிகளை போட்டு வைப்பார். அதை பார்த்துக்கொண்டே சாப்பிடுவார்” என தெரிவித்துள்ளார். அமலா பால் கூறிய இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெகுவிழாவாக நடைபெற்ற கிங்காங் மகளின் திருமணம் – சினிமா பிரபலங்கள் வருகை!

More in Featured

To Top