Connect with us

அம்மா இருக்கும்போது வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார் – சின்மயி வெளிப்படை பேச்சு..

Featured

அம்மா இருக்கும்போது வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார் – சின்மயி வெளிப்படை பேச்சு..

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகிகளில் ஒருவர் சின்மயி. இவர் பாடகி மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞர்களில் ஒருவராகவும் பெயர் பெற்றவர். கவி வைரமுத்துவால் ஏற்பட்ட பிரச்சனையை சின்மயி MeToo இயக்கத்தின் மூலம் முன்வைத்துள்ளார்.

இதன் பின்னர் தமிழில் டப்பிங் செய்ய தடை விதிக்கப்பட்டு, சின்மயி தமிழில் டப்பிங் செய்யாமல் இருந்தார். தடைகளை மீறி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தில் திரிஷாவிற்கு அவரை டப்பிங் பேச வைத்தார். இதனால் சில சர்ச்சைகளும் எழுந்தன. சமீபத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘முத்த மழை’ பாடலை சின்மயி பாடி, அது சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகியது. இதையடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக முன்வந்துள்ளனர்.

இந்நிலையில் சின்மயி அளித்த பழைய பேட்டி ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விதம் குறித்து சின்மயி விரிவாக கூறியுள்ளார். “வைரமுத்து என்னை கட்டிப்பிடித்து அணைக்கும்போது, நான் அப்படியே உறைந்துவிட்டேன். இது என்னமோ தவறு என்று தோன்றியது. எனக்கு கையும் காலும் ஓடவில்லை. ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன். பின்னர் பதறியடித்து ஓடிவிட்டேன். என் அம்மா கீழே இருந்தார்.

அவர் அங்கு இருப்பதை அறிந்ததாலேயே அந்த ஆள் இப்படி நடந்தார். என் அம்மா என்னை தனியா விடமாட்டார். நான் இப்படி நடந்ததைக் கூறிய போது, அம்மா ‘உன் கேரக்டரை சோதிக்க இப்படி பண்ணியிருப்பார்கள். இவர்கள் பெரியவர்கள், எது சொன்னாலும் கொலை கூட பண்ணி விடுவார்கள்’ என கூறினார்” என்று சின்மயி பேட்டியில் பகிர்ந்துள்ளார். இது ஒரு பழைய பேட்டி என இருந்தாலும், தற்போது மீண்டும் வைரலாகி அதிக கவனத்தை பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ் நடிகை ரித்விகாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! மாப்பிள்ளை யார் தெரியுமா?

More in Featured

To Top