Connect with us

அந்த விஷயத்தால் என் கணவர் 10 நாள் என் பக்கத்தில் கூட வரவில்லை – நடிகை கீர்த்தி சுரேஷ் சுவாரஸ்ய பகிர்வு..

Featured

அந்த விஷயத்தால் என் கணவர் 10 நாள் என் பக்கத்தில் கூட வரவில்லை – நடிகை கீர்த்தி சுரேஷ் சுவாரஸ்ய பகிர்வு..

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது ஹிந்தி சினிமாவிலும் தனது இடத்தை பரப்பி வருகிறார். பல படங்களில் நடித்துள்ள கீர்த்திக்கு மிகப்பெரிய புகழையும் பாராட்டையும் பெற்றுத் தந்த படம் ‘மகாநடி’ தான். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கையை தழுவி உருவாகிய இப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்த நேரத்தில், ஆண்டனி என்பவரை காதலித்து வந்த கீர்த்தி, அவருடன் திருமணமும் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இரண்டு முறை, பாரம்பரிய முறையிலும் நடைபெற்றது. சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசும் போது, “ஆண்டனியிடம் காதலை முதலில் சொன்னது நான்தான். எங்களது காதலை ரகசியமாக வைத்துக்கொள்ள நிறைய கஷ்டப்பட்டோம்” எனக் கூறினார்.

மேலும், “நான் நடித்த படங்களில் ஆண்டனிக்கு ‘மகாநடி’, ‘சாணிக்காயிதம்’, ‘ரகுதாத்தா’ உள்ளிட்ட படங்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக ‘சாணிக்காயிதம்’ படத்தின் ஜானரை அவர் மிகவும் ரசித்தார். அந்தப் படத்தை பார்த்த பிறகு பத்து நாட்கள் எனது பக்கத்துக்கு வரவே இல்லை” என்றும் அவர் புன்னகையுடன் பகிர்ந்துகொண்டார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித்தின் 65வது படத்தை இந்த இயக்குனர் இயக்க வாய்ப்பு உள்ளது? புதிய கூட்டணி உருவாகுமா?

More in Featured

To Top