Connect with us

AK 64 படத்துக்காக அஜித் சம்பளம் எவ்வளவு தெரியுமா! இத்தனை கோடியா?

Featured

AK 64 படத்துக்காக அஜித் சம்பளம் எவ்வளவு தெரியுமா! இத்தனை கோடியா?

அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து உலகம் முழுவதும் ரூ. 285 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தப் படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளியான இந்த திரைப்படம், அஜித்தின் திரைப்பயணத்தில் முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது. ரசிகர்களாலும் விமர்சனங்களாலும் குட் பேட் அக்லி அவரது “கரியர் பெஸ்ட்” படமாகக் கருதப்படுகிறது.

இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து அஜித் நடிக்கவுள்ளார். AK 64 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படத்தை பிரபல தயாரிப்பாளரும் ஐசரி கே. கணேஷ் தயாரிக்க உள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பிற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மாதம் இறுதிக்குள் நடிகர் அஜித் சம்பளமாக அட்வான்ஸ் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய தகவலின்படி, AK 64 படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 180 கோடி சம்பளம் பெற உள்ளார். முன்னதாக அவர் குட் பேட் அக்லி படத்திற்கு ரூ. 163 கோடி சம்பளமாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் படத்தை இயக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரூ. 12 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாகவும், இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரஜினி படம் பார்த்து 40 வருடங்களாக செய்த தவறு – சசிகுமார் வெளிப்படையாக சொன்ன அதிர்ச்சி உண்மை!

More in Featured

To Top