Connect with us

உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆகும் சின்மயி! ‘முத்த மழை’ பாடலுக்கு கிடைக்கும் பிரமாண்ட வரவேற்பு!

Featured

உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆகும் சின்மயி! ‘முத்த மழை’ பாடலுக்கு கிடைக்கும் பிரமாண்ட வரவேற்பு!

‘தக் லைப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்குமுன், இந்த பாடலை தமிழில் பாடகி தீ பதிவு செய்திருந்தாலும், நிகழ்வின் போது சின்மயி பாடிய நேரலை பதிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இப்பாடலுக்கான ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்க, பலரும் சின்மயியின் குரல் படத்தில் இடம்பெற்ற தீயின் பதிப்பை விட சிறப்பாக இருக்கிறது என பாராட்டி வருகின்றனர். இதன் விளைவாக, சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடல் தற்போது உலக அளவில் ட்ரெண்டிங் பாடல்களில் ஒன்று எனப் பதிவாகியுள்ளது.

உலக ட்ரெண்டிங் பாடல்கள் பட்டியலில் இந்த பாடல் 10வது இடத்தையும், இந்திய அளவில் ட்ரெண்டிங் பாடல்களில் 8வது இடத்தையும் பிடித்துள்ளது.
இது தமிழ் பாடலுக்கான ஒரு பெரும் சாதனை எனவும், சின்மயியின் குரலுக்கான பாராட்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்..

More in Featured

To Top