Connect with us

‘கூலி’ படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – படம் எப்படி இருக்குனு தெரியுமா?

Featured

‘கூலி’ படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – படம் எப்படி இருக்குனு தெரியுமா?

லியோ திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிரம்மாண்டமாக இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘கூலி’. இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாநாயகனாக நடிக்கிறார். படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, மற்றும் ஷோபின் ஷபீர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை வெளியான ‘கூலி’ திரைப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவுக்கு ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை டி. ராஜேந்தர் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘கூலி’ படத்தின் முதல் பாதியை சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனிப்பட்ட முறையில் பார்த்துள்ளார். படம் எப்படி உருவாகி வருகிறது என்பதை அறிந்து கொள்ளும் நோக்கில் இவர் பார்த்ததாக கூறப்படுகிறது. படம் முதல் பாதி வரை சிறப்பாக வந்துள்ளதாகவும், அதனால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் தனது சமீபத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top