Connect with us

ரசிகர்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என அஜித் நினைப்பார் – சினேகா பகிர்ந்த அனுபவம்..

Featured

ரசிகர்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என அஜித் நினைப்பார் – சினேகா பகிர்ந்த அனுபவம்..

தல அஜித். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ. ஒருபக்கம் சினிமா. மறுபக்கம் கார் ரேசிங். இரண்டையும் சமமாக பேலன்ஸ் செய்து வருகிறார். சமீபத்தில் அவர் இந்திய அரசின் மிக முக்கியமான விருதான பத்ம பூஷன் விருதைப் பெற்றார்.

அவரைப் பற்றி திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டிப் பேசியுள்ளனர்.
அந்தவகையில், நடிகை சினேகா, தல அஜித்துடன் ‘ஜனா’ திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். “படப்பிடிப்பில் அஜித்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் வரும். அவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்படுவார்கள். அப்போ அஜித் அமைதியாக, ‘லைன்ல நிப்பாங்க. எல்லாருடனும் நா போட்டோ எடுக்கிறேன்’ என்பாராம்.

படப்பிடிப்பு முடிந்ததும், அவர் பொறுமையாக நிற்பாராம். ஒவ்வொருவருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்வாராம். அதைக் காண்பதே ஒரு ஆச்சரியம் போல இருக்கும். அவ்வளவு எளிமையானவராம் அஜித். அவரைப் போல் அவருடைய ரசிகர்களும் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என அவருக்கு எப்போதும் ஆசையாம்.” இதுதான் ஒரு நட்சத்திரத்தின் உண்மையான மகத்துவம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top