Connect with us

தம்பிடி பிரயோஜனமில்ல.. கொலவெறி மேல் கொலவெறியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. பின்னணி என்ன?

Dhanush

Cinema News

தம்பிடி பிரயோஜனமில்ல.. கொலவெறி மேல் கொலவெறியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. பின்னணி என்ன?

ஒய் திஸ் கொலவெறி பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனாலும் அதனால் 3 படத்திற்கு எந்த பிரயோஜனமும் கிடைக்கவில்லை என இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சமீபத்தில் லால் சலாம் படம் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நிலையில், விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், தமிழ்நாட்டில் வசூல் சிறப்பாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது தனது முதல் படமான 3 குறித்து பேசிய ஐஸ்வர்யா, ஒய் திஸ் கொலவெறி பாடல் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலம் ஆனாலும், அதனால் படத்திற்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை என்றார்.

மேலும், இந்த பாடலால், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து, படக்குழுவினரின் மீது அழுத்தத்தை உருவாக்கியதாகவும் கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top