Connect with us

பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் லால் சலாமை பீட் செய்யும் லவ்வர்

Lover-Movie-2024

Cinema News

பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் லால் சலாமை பீட் செய்யும் லவ்வர்

ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த லால் சலாம் படத்திற்கு நிகராக மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்த மணிகண்டன் கடந்த ஆண்டு வெளியான குட் நைட் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து லவ்வர் என்ற படத்தில் நடித்தார்.

காதலில் உள்ள சிக்கல்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கிடையே, அதே தேதியில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வெளியான லால் சலாம் படமும் வெளியானதால் லவ்வர் படத்திற்கு கூட்டம் வராது எனக் கூறப்பட்டது. ஆனால், லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் பல இடங்களில் படத்திற்கு போதுமான அளவு கூட்டம் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், லவ்வர் படமும் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வெளியானதால், படத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பாக்ஸ் ஆபீசில் லவ்வர் படத்தின் வசூல் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், லால் சலாம் படத்தின் வசூலை முறியடிக்கும் நிலைக்கு முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.

லால் சலாமுக்கு நிகராக மணிகண்டனின் லவ்வர் படமும் வசூலில் முன்னேறியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இதுவரை யாரும் செய்யாத உலகசாதனை - கொல்கத்தா கொடுத்த இமாலய இலக்கை கடந்து வரலாறு படைத்தது பஞ்சாப் அணி..!!

More in Cinema News

To Top