Connect with us

இலங்கை தமிழர் பகுதியில் தமன்னா பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் களேபரம்

Tamanna

Cinema News

இலங்கை தமிழர் பகுதியில் தமன்னா பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் களேபரம்

இலங்கையில் தமன்னா உள்ளிட்ட தமிழ் திரை பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் வன்முறை வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, கடந்த மாதம் இலங்கையில் இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது மகள் பவதாரிணி மறைவால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் யாழ்ப்பாணத்தை அடுத்த முற்றவெளி மைதானத்தில் பின்னணி பாடகர் ஹரிஹரன் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு உள்ளிட்ட பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.

நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணமில்லை என அறிவிக்கப்பட்டதால் சுமார் ஒரு லட்சம் பேர் நிகழ்ச்சியைப் பார்க்க திரண்டதாகக் கூறப்படும் நிலையில், திடீரென நிகழ்ச்சிக்காக போடப்பட்ட இருக்கைகளில் ஒரு பகுதி கட்டண இருக்கையாக மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் இதற்காக ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை வசூலிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் பலர் தமன்னாவை பார்த்ததும் கட்டுக்கடங்காமல் கட்டண இருக்கையில் இருந்தவர்களை பின்னுக்குத் தள்ளி முந்தியடித்து மேடைக்கு அருகில் சென்றுள்ளனர்.

கூட்டத்தை அமைதிப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியாத நிலையில், அங்கு துப்பாக்கியுடன் வந்த அதிரடிப் படையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 6 பேர் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கை அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தமிழ் மக்களின் வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் உதவுவார்கள் என நினைத்தால் இந்த நிகழ்வு ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை என்றும், கூட்டத்தை கட்டுப்படுத்திய பிறகு நிகழ்ச்சி திட்டமிட்டப்படி நடந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலககின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று குஜராத்தை வீழ்த்துமா பெங்களூரு..? டாஸ் வென்ற RCB பந்துவீச முடிவு ..!!

More in Cinema News

To Top