Connect with us

அப்பயும் சரி இப்பயும் சரி தல தான் டாப்பு – தீவிர பயிற்சியில் எம்.எஸ்.தோனி..!!

Featured

அப்பயும் சரி இப்பயும் சரி தல தான் டாப்பு – தீவிர பயிற்சியில் எம்.எஸ்.தோனி..!!

திட்ட தட்ட அரை சதம் போடும் வயதை நெருங்கி வரும் எம்.எஸ்.தோனி நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் பட்டயகிளப்ப தற்போது தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் அம்பணி குடும்பத்தின் திருமண விழாவை முடித்த கையோடு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்தடைந்த சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி தற்போது தனது அணியுடன் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார் .

இம்முறை சில வீரர்கள் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தினமும் அதிகம் நேரம் தோனி செலவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது .

இந்நிலையில் இன்றைய பயிற்சியின் போது பேட்டிங் செய்த தோனி தனது ஆரம்ப காலத்தில் எப்படி பேட்டிங் செய்தாரோ அதேபோன்ற ஸ்டைலில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இதனை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் வயசானாலும் இந்த ஸ்டைல் இன்னும் குறையவே இல்ல தல என கமன்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிடும் ‘புஷ்பா -2’ படக்குழு - இப்போ என்ன அப்டேட் தெரியுமா..?

More in Featured

To Top