Connect with us

பெர்லின் டூ ராஜாக்கூர் – கொட்டுக்காளி படம் குறித்து மனம்திறந்த நடிகர் சூரி..!!

Cinema News

பெர்லின் டூ ராஜாக்கூர் – கொட்டுக்காளி படம் குறித்து மனம்திறந்த நடிகர் சூரி..!!

சூரியின் நடிப்பில் உருவாகி உள்ள கொட்டுக்காளி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படம் குறித்து நடிகர் சூரி மனம்திறந்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளிநாடுகளில் பல சர்வதேச விருதுகளை பெற்ற கூழாங்கல் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படமே கொட்டுக்காளி .

எஸ்.கே புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் சூரியுடன் கேரளா நடிகை அண்ணா பென் உள்பட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 23 ஆம் தேதி திரையரங்குள் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரைலரும் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது தனது சொந்த ஊரில் நடிகர் சூரி கொட்டுக்காளி குறித்து பேசியுள்ளது அனைவரையும் நெகிழ்வடைய செய்துள்ளது.

உலகின் தலைச்சிறந்த பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையைக் கொண்ட கொட்டுக்காளி படத்திற்கு எங்க ராஜாக்கூர் மக்களின் மரியாதை. மதுரை மண்ணின் கதையில் அதன் அசல் மனிதர்களையே நடிக்க வைத்து, உலக நாடுகளின் திரைப்பட விழாக்களில் அந்த ஊர் மக்களை பிரமிக்க வைத்த கொட்டுக்காளி, நம் சொந்த மண்ணின் மக்களின் ஆசி கோரி வந்த தருணம்!. எந்த ஒரு விழாவிற்கும் விருதுக்கும் இணையான தருணம் இது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார் .

நடிகர் சூரி தனது சொந்த ஊரில், மக்கள் முன்னிலையில் கொட்டுக்காளி படக்குழுவினரை கௌரவித்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top