Connect with us

சிறப்பாக தொடங்கியது விடுதலை 2 படத்தின் டப்பிங் பணிகள் – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

சிறப்பாக தொடங்கியது விடுதலை 2 படத்தின் டப்பிங் பணிகள் – வைரல் போட்டோஸ்..!!

இயக்குநர் வெற்றிமாறனின் மிரளவைக்கும் படைப்பான விடுதலை 2 படத்தின் டப்பிங் பணிகள் இனிதே தொடங்கி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படமே விடுதலை.

சூரி மற்றும் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .

இந்நிலையில் இப்படம் இருபாகங்களாக வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் விடுதலை 2 படத்தின் 2 ஆம் பாகம் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது .

இசைஞானி இளையராஜா இசையில் சிறப்பாக தரமாக உருவாகி உள்ள இப்படம் டிச.20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் இனிதே தொடங்கி உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top