Connect with us

ஆளவந்தானின் ஆட்டம் டிசம்பர் முதல்..கமல்ஹாசன் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து!

Cinema News

ஆளவந்தானின் ஆட்டம் டிசம்பர் முதல்..கமல்ஹாசன் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து!

உலகநாயகன் கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு சொல்லி இருக்கின்றார் இந்த தகவல் வைரல் ஆகி வருகின்றது…

கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான படம் தான் ஆளவந்தான்…இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

இப்படம் தயாரிப்பாளர் தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரித்து இருந்தது…ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன்,பாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..சங்கர் எஹெசான் லாய் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்…இதில் இவர் வேற லெவலில் இசை அமைத்து ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்து இருந்தார்…

படத்தில் கமல்ஹாசன் நாயகனாகவும்,வில்லனாகவும் இரண்டு Different தோற்றங்களில் நடிப்பில் மிரட்டியிருப்பார்…இவரின் அந்த நடிப்பை இப்போது நிறைய நபர்கள் கொண்டாடி வருகின்றனர்..இந்த காலத்து ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாட ஆரம்பித்தனர்…

உளவியல் சிக்கலைப்பேசும் இப்படம் கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது..இந்நிலையில் படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில் படத்தை உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய தாணு திட்டமிட்டுள்ளார்…

அதற்கான வேலைகளை துவங்கி விட்டார் என சொல்லப்படுகின்றது….அதன்படி வரும் டிசம்பர் 8-ம் தேதி ஆளவந்தான் திரைப்படம் உலகம் முழுவதும் நிறைய மாற்றங்களுடன் புது புது பொலிவுடனும் படத்தை ரிலீஸ் செய்ய திட்டம் போடப்பட்டு இருக்கின்றது அதனால் நிச்சயம் பேசப்படும் என தெரிகிறது என்ன நடக்கும் என பொறுத்து இருந்து பாப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

More in Cinema News

To Top