Connect with us

இந்தியன் 3 படத்திற்கு ரெடி..கமலின் அதிரடி Lineups! “2.0 Of Kamalhaasan”

Cinema News

இந்தியன் 3 படத்திற்கு ரெடி..கமலின் அதிரடி Lineups! “2.0 Of Kamalhaasan”

நம்முடைய தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர் தான் கமலஹாசன் அவர்கள்..அதனை போல ரஜினி அவர்கள் 45 வருடத்திற்கு மேலாக ஓடி வருகின்றார்….இவர்கள் இருவரும் இன்றளவும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தங்களுடைய படங்களை வெளியிட்டு வருகின்றனர்…அப்படி ஒரு மார்க்கெட் வைத்து இருக்கின்றனர் இவர்கள்…

அதிலும் முக்கியமாக கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் ஒரு மாபெரும் வசூல் சாதனையை படைத்தது அனைவரும் அறிந்ததே.அதனால் அவர் நிறைய படங்களை தயாரிக்க முன் வந்து அதனை செய்து வந்தார்…இந்நிலையில் இளம் ஹீரோக்களுக்கு இணையாக தனது அடுத்த அடுத்த படங்களை சைன் செய்து வருகிறார் கமல்…

ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் சுமார் 35 நாட்கள் கால் சீட்டை இந்தியன் 3 திரைப்படத்திற்காக கமல்ஹாசன் கொடுத்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது…அதில் அந்த படத்தின் வேலை நடக்கும் என தெரிகின்றது…

மேலும் வருகின்ற 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கமல்ஹாசன் தனது 233வது திரைப்பட பணிகளை துவங்குவார்…இந்த திரைப்படம் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ளது அனைவரும் அறிந்ததே.

அதேபோல வினோத் திரைப்பட பணிகளை துவங்குவதற்கு முன்பாகவே நாக அஸ்வின் இயக்கத்தில் அமிதாபச்சன், பிரபாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் கல்கி என்னும் படத்தில் பிரம்மாண்ட வில்லனாக இருக்கின்றார் அவர்…

அதனைத் தொடர்ந்து மீண்டும் மணிரத்தினதின் இயக்கத்தில் உருவாகவுள்ள Thug Life திரைப்படத்தில் கமலஹாசன் நடிக்க உள்ளார்…ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் அடிக்கடி வெளியாகி வந்தது.

அதேபோல இந்த திரைப்பட பணிகளை எல்லாம் முடித்துவிட்டு விக்ரம் 2வில் இணையவுள்ளார்,இப்படி முழு நேர பிசியிலும் அடுத்த அடுத்த படங்களை சைன் செய்து இப்போது இருக்கும் நடிகர்களுக்கு இணையாக போட்டி போட்டு நடித்து வருகின்றார் இவர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உறியடி விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

More in Cinema News

To Top