Connect with us

மிடில் கிளாஸ் வாழ்க்கையை பேசும் 3BHK – பாக்ஸ் ஆபிஸில் அதிரடி வசூல்!

Featured

மிடில் கிளாஸ் வாழ்க்கையை பேசும் 3BHK – பாக்ஸ் ஆபிஸில் அதிரடி வசூல்!

சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள 3BHK திரைப்படம், யதார்த்தமான கதைக்களத்தில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம், ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில், 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் ஸ்ரீ கணேஷின் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

நடிகர் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மிடில் க்ளாஸ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து நல்ல ரீச் அடைந்துள்ள 3BHK திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் வசூலிலும் சிறப்பாக முன்னேறி வருகிறது.

இந்த நிலையில், இப்படம் திரையிடப்பட்டு நான்கு நாட்கள் கடந்த நிலையில் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 6.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சித்தார்த் நடித்துள்ள திரைப்படங்களில் நல்ல திறமையை வெளிப்படுத்திய வரவேற்பான படமாகவும், வசூல் ரீதியாக வெற்றிகரமாகவும் இருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாதம்பட்டி ரங்கராஜால் பெண்கள் பலர் பாதிப்பு –ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி தகவல்

More in Featured

To Top