Connect with us

“சென்சார் சர்ச்சையில் சிக்கிய ‘ஜனநாயகன்’ – ஜனவரி 15 தீர்ப்பு”

Cinema News

“சென்சார் சர்ச்சையில் சிக்கிய ‘ஜனநாயகன்’ – ஜனவரி 15 தீர்ப்பு”

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் தற்போது சென்சார் சான்று தொடர்பான சர்ச்சையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட இந்த படம், சில காட்சிகள் மத உணர்வுகளை பாதிப்பதாக கூறி தணிக்கை வாரியம் சான்று வழங்க மறுத்ததையடுத்து, நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலைக்கு சென்றுள்ளது. இதனால் படம் ரிலீஸ் ஆகும் தேதி தற்போது நிச்சயமில்லாத நிலைக்கு சென்றுள்ளது.

இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை வழக்கு சென்றுள்ள நிலையில், அடுத்த முக்கியமான விசாரணை ஜனவரி 15 அன்று நடைபெற உள்ளது. அந்த நாளில் வரும் தீர்ப்பின் அடிப்படையில் தான் ‘ஜனநாயகன்’ படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்பது முடிவு செய்யப்படும். விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் இந்த தீர்ப்பை ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top