Connect with us

“₹75 கோடி சம்பளம்… அல்லு அர்ஜுனுடன் லோகேஷ் கனகராஜ் மெகா கூட்டணி”

Cinema News

“₹75 கோடி சம்பளம்… அல்லு அர்ஜுனுடன் லோகேஷ் கனகராஜ் மெகா கூட்டணி”

‘கூலி’ படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எந்த புதிய பட அறிவிப்பும் இல்லாமல் இருந்த நிலையில், அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் உடன் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டணி இந்திய சினிமாவில் மிகப்பெரிய மாஸ் காம்போவாக பார்க்கப்படுகிறது. ஆக்ஷன் மற்றும் ஸ்டைலிஷ் கதை சொல்லலில் தனித்த அடையாளம் கொண்ட லோகேஷ், அல்லு அர்ஜுனின் ஸ்டார் இமேஜுடன் இணைவதால், இந்த படம் பான்-இந்தியா அளவில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு ₹75 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுவது, அவரது திரையுலக வாழ்க்கையில் புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவர் இந்திய சினிமாவின் உயர்ந்த சம்பளம் பெறும் இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் இந்த பிரம்மாண்ட கூட்டணியை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  👉 “Futuristic Love Story-ஆ? LIK படம் ரசிகர்களை கவருதா?”

More in Cinema News

To Top