Connect with us

4 நாட்களில் பறந்து போ படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ முழு தகவல்!

Featured

4 நாட்களில் பறந்து போ படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ முழு தகவல்!

இயக்குநர் ராம் தன் கைத்திறனை வெளிப்படுத்திய படைப்புகள் மூலம் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றுள்ளார். இதுவரை அவரது இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இப்போது, ராம் இயக்கத்தில் ஐந்தாவது திரைப்படமாக ‘பறந்து போ’ வெளியாகியுள்ளது. இதில், மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார் என்பது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது. மேலும், கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த வாரம் திரையிடப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது, ‘பறந்து போ’ படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் ரூ. 4.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள முதல் படமாகும் என்பதும், அவர்களின் இந்த புதிய கூட்டணிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Neelira” – இயக்குநர்கள் பாராட்டில் மின்னும் படம்!

More in Featured

To Top