Connect with us

CSK வின் இலக்கு என்னவாக இருக்கும் – சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு..!!

Featured

CSK வின் இலக்கு என்னவாக இருக்கும் – சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் CSK – LSG அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற LSG அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணி தற்போது பேட்டிங் செய்ய உள்ளது.

நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டியில் வெற்றி பெற்று 3 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 4 ஆவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணி 4 போட்டியில் வெற்றி பெற்று 3 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  DC VS LSG : பேட்டிங்கில் அசத்துமா டெல்லி..? டாஸ் வென்ற லக்னோ பந்துவீச முடிவு..!!

More in Featured

To Top