Connect with us

மக்களே உஷார்…கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது…

General News

மக்களே உஷார்…கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது…

மழையின் தாக்கம் ஆரம்பித்தது என்றால் அடிக்கடி நமக்கு சிக்கல் ஏற்படும் வகையில் பலவற்று நடக்கும்…தமிழகத்தில் 7 நாட்களுக்கு பரவலாக மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கின்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது…

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது…

இதனால் இன்று தமிழகத்தில் நிறைய இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை இருக்கும் நாளை(23.11.23)அன்றும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது…

கன்னியாகுமரி,திருநெல்வேலி,தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமான முதல் மிக கனமழையும் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர்,விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,திருவாரூர் மாவட்டங்களில் மிகவும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றதாக தகவல் வந்து இருக்கின்றது…மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எழுந்து நில் தமிழா – நவம்பர் 5, TVK தலைவர் அறிவிப்பு

More in General News

To Top