Connect with us

அரசாங்கத்தை விட நம்ம Lifeஐ நாம தான் பார்த்துக்கணும் – கல்வி விருது விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு..!!

Cinema News

அரசாங்கத்தை விட நம்ம Lifeஐ நாம தான் பார்த்துக்கணும் – கல்வி விருது விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு..!!

அரசாங்கத்தை விட நம்ம Lifeஐ நாம தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என தவெக சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் பேசியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விருது வழங்கி பாராட்டி வருகிறார்.

கல்வி விருது என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருதை விஜய் தானே நேரடியாக மாணவ, மாணவிகளுக்கு வழங்குகிறார். இந்த விருதுடன் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இவ்விழாவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பேசிய விஜய் கூறியதாவது :

நம்முடைய தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளார்கள். ஆனால், நமக்கு தற்போது தேவையாக உள்ளது நல்ல தலைவர்கள் தான். நான் தலைவர்கள் என்று சொல்வது அரசியல் மட்டுமல்ல; ஒவ்வொரு துறையிலும் நமக்கு தலைவர்கள் தேவை.

எதிர்காலத்தில் அரசியல் துறையும் ஒரு விருப்பமாக இருக்க வேண்டும். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் தானே? நீங்களே சொல்லுங்கள். அரசாங்கத்தை விட நம்ம Lifeஐ நாமதான் பார்த்துக்கணும்.

உங்களுடைய மனக்கட்டுப்பாடு, தனி மனித ஒழுக்கத்தை வளர்த்துக்குங்க. இப்போதைக்கு நல்லா படிங்க, மத்தத அப்பறம் பார்த்துக்கலாம்.

பெற்றோர்களை விட நாம் அதிகமாக நேரம் செலவழிப்பது நண்பர்கள் மத்தியில்தான்; எனவே நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள். உங்களுடைய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்யுங்கள்

இதையடுத்து போதைப் பழக்கத்திற்கு எதிராக மாணவர்களை ’say no to temporary pleasures, Say no to Drug’ என உறுதிமொழி ஏற்க வைத்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top