Connect with us

🎬 “நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் உருக்கம் 💔

Cinema News

🎬 “நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் உருக்கம் 💔

பிரபல மலையாள இயக்குநர், கதாசிரியர் மற்றும் நடிகரான ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 69. அவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, “நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” என உருக்கமாக கூறியுள்ளார்.

திரைப்படக் கல்லூரியில் தன்னுடன் பயின்ற நாட்களை நினைவுகூர்ந்த ரஜினி, ஸ்ரீனிவாசன் மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்ல, மனிதநேயமும் எளிமையும் கொண்ட நல்ல மனிதர் என புகழாரம் சூட்டினார். தமிழில் லேசா லேசா உள்ளிட்ட படங்களில் தனது இயல்பான நடிப்பாலும் தனித்துவமான முகபாவனைகளாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீனிவாசன், மலையாள சினிமாவிலும் பல தரமான படைப்புகளை வழங்கியவர். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top