Connect with us

அண்ணாமலையின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை – ஆர்.பி.உதயகுமார் பகீர் பேட்டி..!!

Featured

அண்ணாமலையின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை – ஆர்.பி.உதயகுமார் பகீர் பேட்டி..!!

எம்ஜிஆர் புகழை நிலை நிறுத்துவது பற்றி அண்ணாமலையின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் புகழை நிலை நிறுத்துவது பற்றி அண்ணாமலை அறிவுரை கூற தேவையில்லை, 32 மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியவர் ஈபிஎஸ்.

திமுகவின் இரட்டை வேடத்தை நாணயம் வெளியீட்டு விழா வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. மத்திய அமைச்சரின் பேச்சால் முதலமைச்சர் தூக்கத்தை தொலைத்துவிட்டதாக சொல்கிறார்.

உதயநிதியை துணை முதல்வராக அமர்த்துவதில் சிக்கல் இருக்கக்கூடாது என்பதற்கான ஏற்பாடுதான் இதுவா? அழைப்பிதழில் தெளிவாக மாநில அரசின் நிகழ்ச்சி என்று உள்ளது. நாணயத்தில் இந்தி உள்ளது என ஈபிஎஸ் கூறியது தேசவிரோதக் குற்றமா?

நாணய வெளியீட்டுக்காக மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்த திமுக. முதலமைச்சரின் பேச்சு திமுக – பாஜக உறவை அம்பலப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் புரியாத தலைவராக அண்ணாமலை உள்ளார் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கரூர் மரணங்கள்: "நாங்களும் ஆழ்ந்த மன வேதனையில் இருக்கிறோம்" – எஸ்.ஏ. சந்திரசேகர்

More in Featured

To Top