Connect with us

சைலன்ட் ஃபில்ம் முயற்சியில் உருவான ‘காந்தி டாக்ஸ்’ – ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு

Cinema News

சைலன்ட் ஃபில்ம் முயற்சியில் உருவான ‘காந்தி டாக்ஸ்’ – ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு

முழுக்க முழுக்க சைலன்ட் ஃபில்ம் வடிவில் உருவாகியுள்ள காந்தி டாக்ஸ் திரைப்படம், உரையாடல்கள் இல்லாமல் காட்சிகளின் வழியே மகாத்மா காந்தியின் சிந்தனைகள், அகிம்சை மற்றும் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் துணிச்சலான முயற்சியாக அமைந்துள்ளது. டீசர் வெளியானதைத் தொடர்ந்து, காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ள இப்படம், அதன் தனித்துவமான கதை சொல்லல் பாணியால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மேலும், காட்சிகளின் மொழி, சின்னங்கள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், அனைத்து மொழி ரசிகர்களையும் ஒரே நேரத்தில் அணுகக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிக அம்சங்களைத் தாண்டி, கருத்துப் பலம் கொண்ட படமாக இது அமையும் என்ற நம்பிக்கையும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாக்ஸ் ஆபிஸில் வேகம் காட்டும் ‘பத்தா’ – 4 நாட்களில் விஜய் சேதுபதி படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

More in Cinema News

To Top