Connect with us

மீண்டும் மைதானத்தில் மேஜிக் காட்டிய தோனி – லக்னோ அணிக்கு 177 ரன்கள் இலக்கு..!!!

Featured

மீண்டும் மைதானத்தில் மேஜிக் காட்டிய தோனி – லக்னோ அணிக்கு 177 ரன்கள் இலக்கு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிசெய்த சென்னை சூப்பர் கிங்ஸ் லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் லக்னோவில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் LSG – CSK அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணியின் முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் மற்றும் ரஹானே களமிறங்கினர் . இதில் மாற்றத்தை கொண்டு வருவார் என்று முதலில் களமிறங்கப்பட்ட ரச்சின் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார் .

இதையடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் 4வது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இந்த பக்கம் பொறுப்புடன் ஆடிய ரஹானே 36 ரன்களில் அவுட்டாக . அடுத்து வந்த ஷிவம் துபே 3 ரன்களிலும், சமீர் ரிஸ்வி 1 ரன்கள் என அவுட்டாக சென்னை அணி மிடில் ஓவரில் தங்கமாக தடுமாறியது.

அணியை சரிவில் இருந்து மீட்க மொயின் அலி ஆடி வந்த நிலையில் அவரும் 30 ரன்களில் விக்கெட்டானார். மறுபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த ஜடேஜாவுடன் 7ஆவது விக்கெட்டுக்கு கைகோத்தார் தோனி.

அவர் விளாசிய 2 சிக்சர்ஸால் அரங்கமே அதிர்ந்துபோக ஆட்டம் இறுதியில் சூடு பிடித்தது . இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 176 ரன்களைச் சேர்த்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top