Connect with us

அட கடவுளே : மீண்டும் தள்ளிப்போகிறதா விக்ரமின் தங்கலான்..?

Cinema News

அட கடவுளே : மீண்டும் தள்ளிப்போகிறதா விக்ரமின் தங்கலான்..?

சீயான் விக்ரமின் மிரளவைக்கும் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பல படங்களில் பல விதமான கெட்டப்புகளை போட்டு ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள நடிப்பு அரக்கன் சீயான் விக்ரமின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் தான் தங்கலான் .

புரட்சி இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் சீயான் விக்ரமுடன் மாளவிகா மோகன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கிராபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தங்கலான் படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட இருப்பதாகக் ஒரு பக்கம் கூறப்பட்டு வரும் நிலையில் படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாமல் உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூப்பர் ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் மக்களின் மனம் கவர்ந்த பிரபலம் - யார் தெரியுமா..?

More in Cinema News

To Top