Connect with us

திரையரங்குகளை விட்டு OTTக்கு வரும் விஜய்யின் தி கோட் திரைப்படம் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

திரையரங்குகளை விட்டு OTTக்கு வரும் விஜய்யின் தி கோட் திரைப்படம் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற விஜயின் தி கோட் திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யின் கலக்கலான நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்ட திரைப்படமே தி கோட்.

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவான இப்படத்தில் விஜயுடன் பிரபு தேவா , மோகன் , பிரஷாந்த் , வைபவ் , சினேகா ,லைலா , மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் காட்சிகளும் பாடல்களும் ரசிகர்களின் மனதை கவர படத்தின் வசூலோ 500 கோடியை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை கோட் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் 3 ஆம் தேதி நெட்டபிலிக்ஸ் தலத்தில் வெளியாக உள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top