Connect with us

விஜய் சேதுபதியுடன் இணையும் ஹிட் காம்போ…மீண்டும் ஒரு Feel Good Loading!

Cinema News

விஜய் சேதுபதியுடன் இணையும் ஹிட் காம்போ…மீண்டும் ஒரு Feel Good Loading!

நடிகர் விஜய் சேதுபதி நல்ல ஒரு நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கின்றார்,அவருக்கு அவர் நடிகராக நடிக்கும் படங்களை தாண்டி விக்ரம், ஜவான் என விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் சக்கைப்போடு போடுகின்றன.

இதனால் அவருக்கு தொடர்ச்சியாக வில்லன் வாய்ப்புகளே தேடி வருவதாக சொல்லப்படுகிறது…அவர் அதை தவிர்க்கவும் முடியாமல் இருக்கின்றார்…

இன்னொருபக்கம் தனது 50வது படமான மகாராஜாவில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அடுத்தடுத்து அவரது நடிப்பில் மேலும் சில படங்கள் உருவாகவுள்ளன…இந்நிலையில், மீண்டும் வெற்றிக் கூட்டணியில் இணைய விஜய் சேதுபதி முடிவெடுத்துள்ளாராம்…அவர் இந்த கூட்டணியில் இணைந்து மார்க்கெட்டை மீண்டும் கொண்டு வர இருக்கின்றார்…

விஜய் சேதுபதிக்கு மிகப் பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் சூது கவ்வும்.இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கிய இந்தப் படம் தான் விஜய் சேதுபதியை வேற லெவலில் கொண்டுச் சென்றது…சூது கவ்வும் மூவியை தொடர்ந்து விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி கூட்டணி காதலும் கடந்து போகும் படத்தில் இணைந்தது…அது இன்னொரு அழகான படமாக அமைந்தது…

இந்நிலையில் இதனை தொடர்ந்து மற்றொரு படத்தில் இணையவுள்ளனராம் இந்த அப்டேட் வந்து இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது..என்ன மாதிரி இருக்கும் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விராட் கோலி தடாலடி பேட்டிங் - பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 242 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top