Connect with us

அரசியலில் தீவிரம் காட்டும் விஜய் – த.வெ.க உறுப்பினர் சேர்க்கை அணியில் நிர்வாகிகள் நியமனம்..!!

Featured

அரசியலில் தீவிரம் காட்டும் விஜய் – த.வெ.க உறுப்பினர் சேர்க்கை அணியில் நிர்வாகிகள் நியமனம்..!!

நடிகர் விஜயால் தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை அணி உருவாக்கப்பட்டு, அதற்கான நிர்வாகிகள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ அடிப்படைக்‌ கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம்‌. இரண்டு கோடி உறுப்பினர்கள்‌ என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்‌. இதன்‌ முதற்கட்டமாக, உறுப்பினர்‌ சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம்‌.

மகளிர்‌ தலைமையில்‌ முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர்‌, கட்சித்‌ தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள்‌.

தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ உறுப்பினர்‌ சேர்க்கை அணிக்குக்‌ கீழ்க்கண்டவாறு நீர்வாகிகள்‌ நியமிக்கப்படுகிறார்கள்‌.

  • மாநிலச் செயலாளர் – சி.விஜயலட்சுமி
  • மாநில இணைச் செயலாளர் – எஸ்.என்.யாஸ்மின்
  • மாநில பொருளாளர் – சம்பத்குமார்
  • மாநிலத் துணைச் செயலாளர் – விஜய் அன்பன் கல்லணை
  • மாநிலத் துணைச் செயலாளர் – எம்.எல்.பிரபு

இந்தப்‌ புதிய அணி, கட்சியின் உள்கட்டமைப்பைச்‌ சார்ந்து விரைவில்‌ விரிவாக்கம்‌ செய்யப்படும்‌. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்‌ சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக்‌ கட்சித்‌ தோழர்கள்‌ அனைவரும்‌ முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்‌ என த.வெ.க சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top