Connect with us

விபத்தில் உயிரிழந்த த.வெ.க.வினர் – வேதனை தெரிவித்த விஜய்..!!

Featured

விபத்தில் உயிரிழந்த த.வெ.க.வினர் – வேதனை தெரிவித்த விஜய்..!!

விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்த த.வெ.க.வினர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த த.வெ.க தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

“நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,

வழக்கறிஞர் திரு. கில்லி VL.சீனிவாசன்,
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்

திரு. JK.விஜய்கலை,
திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்

திரு. வசந்தகுமார்,
கழகத் தோழர்
பாரிமுனை, சென்னை

திரு. ரியாஸ்,
கழகத் தோழர்,
பாரிமுனை, சென்னை.

திரு. உதயகுமார்,
கழகத் தோழர்,
செஞ்சி

மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த

திரு.சார்லஸ்
கழகத் தோழர்,
வில்லிவாக்கம்,
சென்னை

ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோர விபத்தில் சிக்கிய ‘குட் பேட் அக்லி’ நடிகர் ஷைன் டாம் சாக்கோ – தந்தை உயிரிழந்த சோகம்..

More in Featured

To Top