Connect with us

ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்த ரசிகர்கள்.. வெளியே வந்து சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்

Thalapathy_Vijay

Cinema News

ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்த ரசிகர்கள்.. வெளியே வந்து சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்

சென்னை போரூரில் G.O.A.T படத்திற்கான படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய், அங்கு கூடிய ரசிகர்களுக்காக வெளியில் வந்து தரிசனம் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வரும் G.O.A.T படத்தின் படப்பிடிப்பு சென்னை போரூரில் உள்ள செட்டியார் அகரம் பகுதியில் நடந்து வருகிறார். இதில் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்காக விஜய் அங்கு வந்த நிலையில், தகவலறிந்த விஜய் ரசிகர்கள், அவரை பார்ப்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வெளியே திரண்டனர். இதையறிந்த நடிகர் விஜய், வெளியே வந்து ஒரு வீட்டின் மாடிக்கு சென்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னர், அவர் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு காரில் கிளம்பும்போதும் அங்கேயே இருந்த ரசிகர்கள் அவரை பார்த்து வாழ்க என கோஷம் எழுப்பினர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  40,000 அடி உயரத்தில் பிரியாணி Party! நயன்தாராவின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்!

More in Cinema News

To Top