Connect with us

நான் ராஜாவா இருந்தா அவரை கடத்தி என் அரண்மனையில்.. விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்..

Featured

நான் ராஜாவா இருந்தா அவரை கடத்தி என் அரண்மனையில்.. விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்..

தெலுங்கு இயக்குநர் ரவி பாபு இயக்கிய நுவ்விலா படத்தில் துணை கதாபாத்திரமாக அறிமுகமானார் விஜய் தேவரகொண்டா. 2016-ம் ஆண்டு பெல்லி சூப்புலு படத்தில் ஹீரோவாக நடித்த அவர், அதன்பின் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தார்.

இந்த படம் மிகப் பெரிய வெற்றியை கண்டது. அதன் வெற்றியால், தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் ஆனது. அதன் பின் விஜய் தேவரகொண்டா நடித்த மகாநதி, கீதா கோவிந்தம், டாக்வி வாலா, குஷி ஆகிய படங்களும் ஹிட் ஆனது. இப்போது அவர் கிங்டம் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஜூலை மாதத்தில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், அனிருத்தை பற்றி விஜய் தேவரகொண்டா கூறிய கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றன.

அவர் கூறியது இப்படிதான்:
“விஐபி மற்றும் 3 போன்ற படங்களைப் பார்த்தபோது, அனிருத் மீது எனக்கு ஒரு காதல் உருவானது. யார் இந்த மேதை? இவர் சாதாரணமானவர் இல்லை எனவே தோன்றியது. அப்போது நான் நடிகராகவே இல்லை. ஆனால், ஒருநாள் நடிகராக மாறினால், என் படங்களுக்கு இவர்தான் இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

நான் ஒரு ராஜாவாக இருந்திருந்தால், அனிருத்தை கடத்தி வந்து, அரண்மனையில் வைத்து, என் படங்களுக்கு மட்டும் இசையமைக்கச் செய்திருப்பேன். அவர் உடன் பணியாற்ற வேண்டுமென பல வருடங்களாக நான் காத்திருந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரஜினிக்கு தெரியும் அந்த வலி… தனுஷ் செய்ததால்தான் ஐஸ்வர்யா பிரிஞ்சாங்க! பிரபலம் ஓபன்..

More in Featured

To Top