Connect with us

வனிதா விஜயகுமார் இயக்கிய ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு – அதுவும் யார் முன்னிலையில் தெரியுமா?

Featured

வனிதா விஜயகுமார் இயக்கிய ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு – அதுவும் யார் முன்னிலையில் தெரியுமா?

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக அறிமுகமான வனிதா விஜயகுமார், ‘நடிகையின் மகள்’ என்ற அடையாளத்தோடு திரைப்பட துறையில் நாயகியாக தனது பயணத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் நடித்தாலும், விரைவில் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் கவனத்தை மீண்டும் பெற்றார். அதன் பின் தொடர்ந்து சினிமா மற்றும் தொலைக்காட்சி துறைகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். அதோடு, தனியாக பல்வேறு தொழில்களையும் தொடங்கி அதை கவனித்து வருகிறார்.

தற்போது, வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ள ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை வனிதா விஜயகுமார் தான் இயக்கியுள்ளார். சமீபத்தில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில், ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் போஸ்டரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படம் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த வெளியீட்டு விழாவில் வனிதா விஜயகுமாரும், அவரது மகள் ஜோவிகாவும் ரஜினிகாந்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரஜினி படம் பார்த்து 40 வருடங்களாக செய்த தவறு – சசிகுமார் வெளிப்படையாக சொன்ன அதிர்ச்சி உண்மை!

More in Featured

To Top