Connect with us

இந்தி தெரியாது சொல்லி தமிழில் பேசிய தனுஷ்… குபேரா விழா வீடியோ வைரல்..

Featured

இந்தி தெரியாது சொல்லி தமிழில் பேசிய தனுஷ்… குபேரா விழா வீடியோ வைரல்..

நடிகர் தனுஷ் நடித்துள்ள அடுத்த திரைப்படம் “குபேரா”. இந்தப் படம் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இப்படத்தில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். “குபேரா” திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், “குபேரா” படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் தமிழில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், தொப்பாளினி தனுஷை சில வார்த்தைகள் பேசுமாறு கேட்டபோது, தனுஷ் அனைவருக்கும் வணக்கம் என்றழைத்து தமிழில் பேசத் தொடங்கினார். பின்னர், அவர் “எனக்கு இந்தி தெரியாது. அதனால் ஆங்கிலத்தில் பேசுகிறேன், அதுவும் கொஞ்சம் தான் தெரியும்” என்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top