Connect with us

‘அமரன்’ படத்தின் ‘உயிரே’ வீடியோ பாடல் வெளியானது..!!

Cinema News

‘அமரன்’ படத்தின் ‘உயிரே’ வீடியோ பாடல் வெளியானது..!!

‘அமரன்’ படத்தில் மாபெரும் வரவேற்பை பெற்ற ‘உயிரே’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது .

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் பல வருடங்களாக பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட அமரன் திரைப்படம் . தமிழ்நாட்டை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது .

இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்து அசத்தியுள்ளார்.இவருடன் சாய்பல்லவி , ஸ்ரீ , லல்லு , உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களில் நடிப்பில் உருவான இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவான இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது இப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அமரன் திரைப்படத்தில் மாபெரும் வரவேற்பை பெற்ற ‘உயிரே’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top