Connect with us

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 1 கோடி நிதி வழங்கிய உதயநிதி..!!

Cinema News

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 1 கோடி நிதி வழங்கிய உதயநிதி..!!

நெடு நீண்ட காலமாக கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப் பணிக்காக நடிகரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 1 கோடி நிதி வழங்கி உள்ளார்.

இதுகுறித்த செய்தியில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள உதயநிதி கூறியதாவது :

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் வேண்டும் என்பதற்காக நடிகர் சங்க நிர்வாகிகள் தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில், நடிகர் சங்க கட்டடப் பணிகளை தொடங்குவதற்கான வைப்பு நிதிக்காக, நமது சொந்த நிதியிலிருந்து, ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க நிர்வாகிகளிடம் இன்று வழங்கினோம்.

தமிழ்நாட்டு திரைக் கலைஞர்களின் பல நாள் ஏக்கமாக உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப்பணியை விரைந்து நிறைவு செய்ய வாழ்த்தினோம். மேலும், அவர்களின் கோரிக்கைப்படி இப்பணிக்கு கழக அரசு துணை நிற்குமென்று கூறினோம் என உதயநிதி தெரிவித்துள்ளார்.

உதயநிதியை இன்று நேரில் சந்தித்த விஷால் கார்த்தி நாசர் கருணாஸ் ஆகியோர் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை உதயநிதியிடம் பெற்றுக்கொண்டனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் இயக்குநர் நெல்சன்..!!

More in Cinema News

To Top